Personalise my view
ADULT MIGRANT ENGLISH PROGRAM
நீங்கள் தகுதியானவரா?
மேம்பட்ட ஆங்கிலம்
சிறந்த வாழ்க்கை
புதிதாக வந்திறங்கியவர்களுக்கு இலவச ஆங்கிலப் பாடங்கள்
வயதுவந்த புலம்பெயர்ந்தோர் ஆங்கில நிகழ்ச்சித் திட்டம் பற்றி
- ஆஸ்திரேலியாவில் வாழ, பணிபுரிய மற்றும் கல்வி கற்கத் தேவையான நடைமுறை ஆங்கிலத்தைப் படித்தல்.
- அரசு மற்றும் சமூக சேவைகளை அணுகுவது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளல்.
- அண்மையில் ஆஸ்திரேலியாவுக்கு வந்தவர்களுடன் புதிய நட்பை ஏற்படுத்திக் கொள்ளல்.
- வேலை அல்லது படிப்புக்காகத் தயாராகுதல் மற்றும் உங்கள் எதிர்காலத்துக்கெனத் திட்டமிடுதல்.
தகுதி வரம்பு
- உங்களிடம் குடும்ப விசா, திறமைக்கான விசா, மனிதாபிமான அடிப்படையிலான விசா, வாழ்க்கைத்துணை விசா அல்லதுஅங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசா* உள்ளது.
- உங்களுக்கு ஆங்கிலம் பேசவோ/படிக்கவோ/எழுதவோ தெரியாது அல்லது உங்கள் ஆங்கிலத்தை மேம்படுத்த வேண்டும்.
- உங்கள் வயது 18 –க்கு மேல் உள்ளது. 15 முதல் 17 வயதுடைய சில புலம்பெயர்ந்த இளையோரும் தகுதியுடையவராக இருக்கலாம்.
*அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக விசாக்களில் வேலை மற்றும் விடுமுறை விசா, பணிபுரியும் விடுமுறை விசா அல்லது விருந்தினர் விசா போன்றவை அடங்காது என்பதைத் தயவுசெய்து நினைவில் கொள்ளவும்.
அனுசரணையான கல்வித் தெரிவுகள்
- குயின்ஸ்லாந்து முழுவதுமுள்ள பல்வேறு இடங்களில் முழு நேர அல்லது பகுதி நேரப் படிப்பு.
- முழு நேரப் படிப்பில் நீங்கள் கலந்து கொள்ள முடியவில்லையென்றால், வீட்டில் தனியாகப் பயிற்றுவிக்கும் தன்னார்வ ஆசிரியரின் ஆதரவு.
- தொலைதூரக் கல்வி மூலம் இணையத்தில் படிப்பு.
வகுப்பில் நான் எவற்றைக் கற்றுக் கொள்வேன்?
- ஆங்கில அறிவில் உங்கள் தகுதி நிலைக்கு உகந்த வகுப்பில் சேருதல்.
- நீங்கள் படிக்கும்போது, எங்கள் சமூகத் தொடர்பு அலுவலர் மற்றும் உங்கள் AMEP வழக்கு மேலாளர் போன்றோரின் ஆதரவு.
- ஆஸ்திரேலிய வேலைத்தலத்தின் மொழி, பண்பாடு மற்றும் நடைமுறைகளைப் பற்றி அறிந்து கொள்ளுதல்.
- உங்களுக்குக் குறைந்த அளவு கல்வியறிவு இருந்தாலோ அல்லது கற்கும் திறனைப் பாதிக்கக்கூடிய பிரச்சினைகள் இருந்தாலோ கூடுதல் ஆங்கிலப் பயிற்றாசிரியர் பெறுதல்.
- நீங்கள் ஆங்கிலம் கற்கும்போது இலவச குழந்தைப் பராமரிப்பு பெறுதல் (தகுதியிருக்கும் பட்சத்தில்)
- நேர்காணல்களுக்குத் தயார் செய்துகொள்ளல் மற்றும் சுயவிவரத் தொகுப்பு (resume) எழுதுதல்
எங்களது ஆங்கிலப்பாடங்களைப் பற்றி இப்போது விசாரிக்கவும்

The AMEP is funded by the Australian Government Department of Home Affairs. In Queensland, the AMEP is delivered through TAFE Queensland.